கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கிறாரா...? ட்விட்டரில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு

|

மும்பை: சமீபத்தில் கரீனாகபூர் வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிறைமாத கர்ப்பிணியாக நிற்பது போன்ற போட்டோ ட்விட்டரில் வெளியானதில் இருந்து, கரீனா கர்ப்பமாக இருக்கிறார் என அனைவரும் பேச ஆரம்பித்து விட்டார்களாம்.

ஆனால், கரீனாவின் உப்பிய வயிற்றின் பிண்ணனியில் உள்ள ரகசியம் கர்ப்பம் தான் என்றும், ஆனால் அது ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட வேஷம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகைப்படத்தில் ரோஸ் நிற சுடிதார் அணிந்து நிறைமாத கர்ப்பிணியாக கரீனா நிற்பது, நடப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது.

கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கிறாரா...? ட்விட்டரில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு

புனித் மல்கோத்ரா இயக்கத்தில் வரும் நவம்பரில் வெளியாக இருக்கும் படமான ‘கோரி தேரா ப்யார் மெயின்' ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாம் அது. யாரோ செய்த குறும்பின் காரணமாக அது நெட்டில் லீக்காகி விட்டதாம்.

கரீனா கபூர் சமீபத்தில் திருமணமானவர் என்பதால் விரைவில் அவரிடமிருந்து சந்தோஷமான செய்தியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

Post a Comment