தம்பி நடிகரின் படமொன்றில் அடிரடி திருப்பமாம். சாப்பாடு படத்திற்கு இணையாக தயாரான கவுண்டரின் பேமஸ் டயலாக்கை தலைப்பாகக் கொண்ட படம் அது.
நகைச்சுவை, காதல் கலந்த குடும்பப்படம் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அப்படத்தில் ஸ்வீட் நடிகை தான் கதாநாயகி. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை திடீரென படத்தில் இன்னொரு நாயகியையும் நுழைத்துள்ளார்களாம்.
பேசிய சித்திர நடிகையான கேரளத்து பைங்கிளிக்கு படத்தில் அதிகப்படியான காட்சிகள் அதிரடியாகச் சேர்க்கப் பட்டுள்ளதாம். இதனால் ஸ்வீட் நடிகையின் போர்ஷன் குறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
படம் எப்போ ரிலீஸ் என்ற ரேஞ்சில் திடீரென படத்தில் இன்னொரு கதாநாயகியின் காட்சிகள் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment