சென்னை: சூர்யாவை வைத்து தான் இயக்கும் புதிய படத்துக்கு ரவுடி என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக வந்த செய்திகளை இயக்குநர் லிங்குசாமி மறுத்துள்ளார்.
சிங்கம் 2 படத்துக்குப் பிறகு லிங்குசாமி படத்தில் நடிக்கிறார் சூர்யா. இதில் அவருக்கு சமந்தா ஜோடியாக நடிக்கிறார்.
இந்தப் படம் குறித்து தொடர்ந்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அதில் ஒன்று, படத்துக்குத் தலைப்பு முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், ரவுடி என இப்போதைக்கு தலைப்பு வைத்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இப்போது அதனை மறுத்துள்ளார் லிங்குசாமி.
"சூர்யாவை வைத்து நான் இயக்கும் படத்திற்கு தலைப்பு 'ரவுடி' என மீடியாக்களில் செய்தி உலவுகிறது. அது உண்மையல்ல.. உண்மையான தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்...", என்று அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment