மும்பை: எங்களது இரண்டாவது குழந்தை பற்றி இப்போதே நீங்களாக எதையும் யூகிக்க வேண்டாம். அப்படி ஒரு நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார்.
அபிஷேக் பச்சன் -ஐஸ்வர்யா ராய் நட்சத்திர தம்பதிகளுக்கு ஆராதியா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நவம்பர் வந்தால் ஆராதியாவுக்கு 2 வயது.
இப்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஐஸ்வர்யா. ஒரு படத்தில் கணவர் அபிஷேக் பச்சனுடன் நடிக்கிறார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயைச் சந்திப்பவர்கள், அவரது இரண்டாவது குழந்தைப் பற்றிப் பேசுகிறார்களாம்.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஸ்டெம் செல் வங்கி விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராயிடம், நிருபர்கள் சிலர் அடுத்த குழந்தை பற்றி மறைமுகமாகக் கேள்வி கேட்டனர்.
உடனே ஐஸ்வர்யா, "நீங்கள் என்னிடம் என்ன கேட்க போகிறீர்கள் என்று புரிகிறது. அதற்கான நேரம் வரட்டும். உங்களுக்கெல்லாம் தெரியாமலா போகிறது.
அது வரை நீங்கள் வேறு எதையும் யூகிக்க வேண்டாம. ஆராதியா எங்கள் வாழ்விற்கு கிடைத்த ஆசிர்வாதம். நீங்களும் ஆசீர்வதியுங்கள்," என்றார்.
Post a Comment