மைக்கேல் ராயப்பன் எம்எல்ஏ தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் கண்ணன். இந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடிக்கிறார்.
தமிழில் ‘நாடோடிகள்', ‘கோரிப்பாளையம்', தென்மேற்கு பருவக்காற்று', ‘பட்டத்து யானை' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார் மைக்கேல் ராயப்பன். இவரது குளோபல் இன்போடெய்ன்மெண்ட் என்ற நிறுவனம்தான் இப்போது புதிய படத்தை அறிவித்துள்ளது.
இப்படத்தை ‘ஜெயங்கொண்டான்', கண்டேன் காதலை, ‘சேட்டை' ஆகிய படங்களை இயக்கிய கண்ணன் இயக்குகிறார். விமல் கதநாயாகனாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். விமலுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. விமலின் அடுத்த குடும்பச் சித்திரமாக இந்தப் படம் அமையும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கின்றனர். ஜுன் 2014-ல் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Post a Comment