ஸ்ருதியை தாக்கியவர் கைது: சகோதரருக்கு வேலை கேட்டு வந்ததாக வாக்குமூலம்

|

ஸ்ருதியை தாக்கியவர் கைது: சகோதரருக்கு வேலை கேட்டு வந்ததாக வாக்குமூலம்

மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸனை அவரது வீடு புகுந்து தாக்கிய அசோக் த்ரிமுகேவை போலீசார் கைது செய்தனர்.

நடிகை ஸ்ருதி ஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை பல காலமாக பின் தொடர்ந்து வந்த ஒருவர் கடந்த 19ம் தேதி அவரது வீட்டுக் கதவை தட்டியுள்ளார். கதவை திறந்த ஸ்ருதியை அந்த நபர் கழுத்தை நெறித்துள்ளார். ஸ்ருதி அவரை வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்த முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி ஸ்ருதி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஸ்ருதியை தாக்கியவர் அசோக் த்ரிமுகே(32) தான் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று அவரை அவரது வீட்டுக்கு அருகே வைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அசோக் கூறுகையில்,

நான் ஸ்ருதியை பின் தொடரவில்லை. என் சகோதரருக்கு வேலை கேட்டுத் தான் அவரது வீட்டுக்கு சென்றேன். நான் பிலிம் சிட்டியில் பணியாற்றி வந்தேன். என்னை ஸ்ருதி தவறாக புரிந்து கொண்டார் என்றார்.

அசோக்கின் சகோதரி ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

 

Post a Comment