முதல்வர் சாண்டியை சந்தித்து நடந்ததை கூறினேன்: நடிகை ஸ்வேதா மேனன்

|

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து தன்னிடம் காங்கிரஸ் எம்.பி. நடந்து கொண்ட விதம் குறித்து தெரிவித்ததாக நடிகை ஸ்வேதா மேனன் கூறினார்.

மலையாள நடிகை ஸ்வேதா மேனன் கொல்லத்தில் நடந்த படகு போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குரூப் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் மறுநாளே புகாரை வாபஸும் பெற்றார்.

முதல்வர் சாண்டியை சந்தித்து நடந்ததை கூறினேன்: நடிகை ஸ்வேதா மேனன்

இந்நிலையில் அவர் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை நேற்று சந்தித்து பேசினார்.

இது குறித்து ஸ்வேதா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் முதல்வரை சந்தித்து நடந்தவை பற்றி கூறுவேன் என்று கடந்த வாரம் தெரிவித்தேன். அதன்படி நேற்று அவரை சந்தித்து நிகழ்ச்சியில் எனக்கு என்ன நடந்தது என்பதை தெரிவித்தேன் என்றார்.

 

Post a Comment