ஹைதராபாத்: இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகை ரேணு தேசாயை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார் நடிகர் பவன் கல்யாண் என்று தெலுங்கு சினிமாவில் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். இவர் சிரஞ்சீவியின் உடன் பிறந்த தம்பி. தெலுங்கில் இவருக்கு பவர் ஸ்டார் என இன்னொரு பெயரும் உண்டு.
பவன் கல்யாணுக்கு இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவி நந்தினியை 1997-ல் திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக 2007-ல் விவாகரத்து செய்து பிரிந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மனைவிக்கு ரூ.5 கோடி ஜீவணாம்சம் கொடுத்தார்.
அதன் பிறகு தெலுங்கு நடிகை ரேணு தேசாய்க்கும் பவன் கல்யாணுக்கும் காதல் ஏற்பட்டது. 2009- ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது பவன் கல்யாண், ரேணு தேசாய் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாகவும், கடந்த ஆண்டிலிருந்தே இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
முதலில் நீதிமன்றத்துக்கு வெளியில் பேசி முடிக்க முடிவு செய்திருந்தார் பவன் கல்யான். ஆனால் இப்போது பரஸ்பர விவாகரத்து கோரி நீதிமன்றத்திலும் மனு கொடுத்துள்ளதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது.
கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்த விவாகரத்து செய்தி உலா வருகிறது. நீதிமன்றத்துக்கு போகக் கூடாது என்பதற்காக ரேணுவுக்கு ஒரே செட்டில்மென்டாக ரூ 40 கோடியை பவன் கல்யாண் கொடுக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து இருவருமே எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
Post a Comment