கிட்டத்தட்ட முழு நேரத் தயாரிப்பாளராகவே மாறிவிட்டார் தனுஷ். 3, எதிர்நீச்சலைத் தொடர்ந்து, தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவன பேனரில் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தை இயக்கப் போகிறவர்... அவரது அண்ணன் செல்வராகவன்.
தனுஷ் இப்போது மரியான், நய்யாண்டி மற்றும் வெற்றிமாறன் படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் ராஞ்ஜானே படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
இன்னொரு பக்கம் சொந்தப் படத் தயாரிப்பிலும் பிஸியாக உள்ளார். 3 படத்துக்குப் பிறகு இப்போது எதிர்நீச்சல் என்ற படத்தைத் தயாரிக்கும் தனுஷ், அடுத்து தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் புதுப் படத்தைத் தொடங்குகிறார்.
இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்க, கோலா பாஸ்கர் எடிட்டிங்கை கவனிக்கிறார்.
படத்தின் தலைப்பு, நடிகர்கள் போன்ற விவரங்களை பின்னர் தெரிவிப்பதாக தனுஷ் கூறியுள்ளார்.
Post a Comment