கமல் - சூர்யா - ஷங்கர் இணையும் இந்தியன் 2?

|

Kamal Surya Indian 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் - சூர்யா முதல் முறையாக இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷங்கர் - கமல் இணைந்த வெற்றிப் படமான இந்தியனின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்கும் என்றும், இந்தியன் 2 என இதற்குப் பெயர் சூட்டத் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் சிறப்பு, கமலும் சூர்யாவும் இணைந்து நடிப்பதுதான்.

இந்தியன் படத்தின் க்ளைமாக்ஸில் தாத்தா கமல், பெரிய விபத்திலிருந்து தப்பி வெளிநாட்டுக்குத் தப்பி விடுவதுபோல காட்சியமைக்கப்பட்டிருந்தது.

இப்போது அதை வைத்தே இரண்டாம் பாகத்தை உருவாக்கப் போகிறார்களாம். முதல் பாகத்தில் கமல் இரு வேடங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டாம் பாகத்தில் இளவயது கமல் இருக்கமாட்டார். அவருக்குப் பதில் சூர்யா என யோசித்து வைத்துள்ளார்களாம்.

சூர்யா மற்றும் கமலிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.

கமல் தனது விஸ்வரூபம் -2 படத்தை முடித்த பிறகு இந்தியன் 2-ல் நடிக்கிறார். அதே போல சூர்யாவும் கவுதம் மேனன், லிங்குசாமி படங்களை முடித்துவிட்டு இந்தியன் -2க்கு வருகிறார்.

இந்தப் படத்தினை சுமார் 125 கோடி செலவில் இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர்.

எப்படியென்றாலும், இந்த தகவல்கள் அனைத்துமே மீடியாவில் உலா வருபவைதான்.

 

Post a Comment