இன்றைய அவசர யுகத்தில் விதவிதமாக தோன்றியிருக்கும் நோய்களுக்கு சாதி, இன பேதங்கள் கிடையாது; ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமும் கிடையாது.
அதிகாரம் கொண்டவர்களுக்கும் சாமானியர்களுக்கும்கூட இன்று புதுப் புது வடிவில் நோய்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. வசதிகொண்டவர்கள் பிரபல டாக்டர்களைச் சந்தித்து நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெறுகிறார்கள்; வசதியில்லாதவர்கள் வழியில்லாமல் போராடுகிறார்கள்.
உங்களிடம் நோய்கள் இருக்கலாம்; அதுபற்றிய சந்தேகங்கள் இருக்கலாம். அவற்றை எல்லாம் தீர்க்க உங்களைத் தேடி உங்கள் வீட்டு வரவேற்பறைக்கே ஒரு இன்ஸ்டண்ட் கிளினிக்காக வருகிறது புதுயுகத்தின் ‘6 டாக்டர்களும் 1008 சந்தேகங்களும்' என்ற நிகழ்ச்சி. இந்தக் குழுவில் இருப்பவர்கள் அனைவரும் வெவ்வேறு மருத்துவ துறை சார்ந்த நிபுணர்கள்.
பிரபலமான இவர்கள் உங்களுக்கு கொடுக்கப் போவது மருந்துகளை அல்ல; நம்பிக்கைகளை! உங்களை அச்சப்பட வைக்கும், துவள வைக்கும் எந்தவிதமான நோய்கள் குறித்தும் நீங்கள் இந்த மருத்துவர்களைக் கேட்கலாம்; அவர்களிடமிருந்து அற்புதமான ஆலோசனைகளைப் பெறலாம்; மனத்தின் கலக்கத்தை இறக்கி வைக்கலாம்.
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘6 டாக்டர்களும் 1008 கேள்விகளும்' என்ற இந்த நேரடி நிகழ்ச்சி உங்கள் வீட்டுக்கான கிளினிக்காகவே இருக்கும் என்கின்றனர் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.
வாருங்கள், உங்கள் தொலைப்பேசியை எடுங்கள், எங்கள் நிகழ்ச்சியின் தொலைபேசி எண்ணான - 044 - 4569 444 என்ற எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.. நோய் சார்ந்து எதையும் கேளுங்கள், சந்தேகங்களை தெளிவு பெறுங்கள்.
Post a Comment