நடிகர் டேனியல் பாலாஜி முதல் முறையாக படம் இயக்குகிறார். குறோணி என அப்படத்துக்கு தலைப்பு வைத்துள்ளார்.
தமிழில் 'காக்க காக்க', 'காதல் கொண்டேன்', 'பொல்லாதவன்', 'வேட்டையாடு விளையாடு' ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி.
இப்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'வை ராஜா வை' என்ற படத்திலும் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது டேனியல் பாலாஜி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். முதன் முறையாக இவர் இயக்கும் படத்திற்கு 'குறோணி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் எம்ஆர் கணேஷ் தயாரிக்கிறார். இயக்குவதோடு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் டேனியல் பாலாஜி. நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் தற்போது ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்தை எடுத்து முடித்துள்ளது. இப்படம் பிப்ரவரி 7ல் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை அடுத்து இந்நிறுவனம் 'குறோணி' படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்குகிறது.
Post a Comment