சென்னை: நேற்று மரணமடைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் இறுதிச் சடங்குகள் இன்று காலை 11 மணிக்கு சென்னை போரூர் மின் மயானத்தில் நடக்கிறது.
பாலு மகேந்திராவின் உடல் பொதுமக்கள் மற்றும் திரைத் துறையினர் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா சினிமா பட்டறை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பாலுமகேந்திராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதிச் சடங்குகள் போரூர் மின் மயானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (பிப்.14) காலை நடைபெறுகிறது.
பாலு மகேந்திராவின் உடல் காலை 11 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பாலுமகேந்திராவுக்கு மனைவி அகிலா, மகன் ஷங்கி மகேந்திரா ஆகியோர் உள்ளனர். ஷங்கி மகேந்திராவும் ஒளிப்பதிவாளராக உள்ளார்.
இன்னொரு மனைவியான மௌனவிகாவும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முயன்று வருகிறார். ஆனால் அவரை பங்கேற்க விடாமல் சிலர் தடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Post a Comment