என் கணவர் பாலுமகேந்திரா உடலை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை- நடிகை மௌனிகா

|

சென்னை: என் கணவர் பாலு மகேந்திரா உடலைப் பார்க்க என்னை அனுமதிக்கவில்லை, என்று நடிகை மௌனிகா புகார் கூறியுள்ளார்.

இயக்குநர் பாலுமகேந்திரா மறைவு குறித்து நடிகை மௌனிகா மனம் திறந்துள்ளார். அவர், "பாலுமகேந்திரா என் கணவர். கடந்த 1993-ம் ஆண்டு முதல் அவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது.

16 வருடங்களுக்கு முன்பு (1998-ம் ஆண்டில்) நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். கோயிலில் திருமணம் செய்து கொண்டோம்.

என் கணவர் பாலுமகேந்திரா உடலை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை- நடிகை மௌனிகா

அன்று முதல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். அவர் இறந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு ஓடினேன். ஆனால் அவர் உடலைப் பார்க்க என்னை சிலர் அனுமதிக்கவில்லை.

பொதுவாக எல்லா 2-வது மனைவிகளுக்கும் நடக்கும் கொடுமைதான் இது என்பது எனக்குப் புரிந்தாலும், இந்தக் கொடுமையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை,'' என்று தெரிவித்துள்ளார்.

வண்ண வண்ணப் பூக்கள் படத்தில் பாலு மகேந்திராவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் மௌனிகா. அதன் பிறகு பாலு மகேந்திரா இயக்கிய கதை நேரம் குறும்படத் தொடரில் பல படங்களில் நடித்துள்ளார்.

இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தனர். 'மௌனிகாவும் என் மனைவிதான்' என்று 2004-ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்தார் பாலு மகேந்திரா. 1998-ம் ஆண்டு கோயிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டதாக ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.

 

Post a Comment