சென்னை: மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது தமிழ் திரையுலகம்.
தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்ஸி போன்ற அமைப்புகள் கூட்டாக இதனை அறிவித்துள்ளன.
தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளியான பாலு மகேந்திரா நேற்று மரணத்தைத் தழுவினார்.
இதைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகமே திரண்டுவந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது. இன்று பிற்பகல் 2 மணிக்கு அவர் உடல் போரூரில் தகனம் செய்யப்படுகிறது.
ஒரு நாள் படப்பிடிப்புகள் ரத்து
தமிழ் சினிமாவுக்கு பல கவுரவங்களைத் தேடித் தந்த படைப்பாளியான பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று ஒரு நாள் அனைத்துப் படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அறிவித்தார்.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பெப்சி தலைவர் அமீர் ஆகியோரும் இதே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
Post a Comment