மும்பை: நடிகர் சல்மான் கான் சக நடிகர் சந்தோஷ் ஷுக்லாவின் சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ரூ.5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
நடிகர் சல்மான் கான் தன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உதவுவார். மேலும் தனக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது கஷ்டம் என்று தெரிய வந்தால் தானாக சென்று உதவி செய்வார். இந்நிலையில் சக நடிகரான சந்தோஷ் ஷுக்லாவின் சகோதரர் அஷுதோஷுக்கு(34) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பது குறித்து கேள்விப்பட்டார்.
உடனே அவர் அஷுதோஷுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார்.
இது குறித்து சந்தோஷ் கூறுகையில்,
சல்மான் பாய் என்னுடைய பிரச்சனை குறித்து படப்பிடிப்பின்போது யார் மூலமாகவோ தெரிந்து கொண்டார். உடனே அவர் என்னை அழைத்து வேலையில் கவனம் செலுத்துமாறு கூறினார். நான் கேட்காமலேயே அவர் எனது சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் அளித்தார். மேலும் அவர் என் அம்மாவுக்கு போன் செய்து பேசினார்.
என் சகோதரருக்கு அவரது மனைவி தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்ததையும் அவர் பாராட்டினார். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அஷுதோஷ் வீடு திரும்பிய பிறகு அவரை சல்மான் பாயை சந்திக்க வைப்பேன். அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்றார்.
Post a Comment