ஆரோகணம் படத்துக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படம்!

|

ஆரோகணம் படத்துக்குப் பிறகு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் புதிய படம் இயக்குகிறார்.

இந்தப் படத்தை ஆரோகணம் படத்தைத் தயாரித்த ஏவி அனூப்பே தயாரிக்கிறார்.

குறைந்த செலவில் ஆரோகணம் என்ற படத்தை எடுத்து, நிறைந்த லாபம் பார்த்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஆரோகணம் படத்துக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படம்!

அதே வழியில் இப்போது இரண்டாவது படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தின் நாயகியாக நடிப்பவர் பியா பாஜ்பாய். கோ, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவர்.

நாயகன் மற்றும் தலைப்பை விரைவில் அறிவிக்கப் போகிறாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஆரோகணம் படத்துக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படம்!

பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய, மேட்லி புளூஸ் இசையமைக்கிறார். லூசியா படத்தின் நாயகி ஸ்ருதி ஹரிஹரன் இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார்.

தம்பி ராமய்யா உள்பட முன்னணி கலைஞர்கள் நடிக்கின்றனர்.

ஆரோகணம் படத்துக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படம்!

இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது. கும்பகோணம், கோவை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

Post a Comment