நம்பர் நடிகைக்கு ஷாக் கொடுத்த இளம் நாயகி

|

சென்னை: பையா நாயகியைப் பார்த்து நயன நடிகை ஆடிப் போயுள்ளாராம்.

தல நடிகருடன் சேர்ந்து நயன நடிகை நடித்தார். அந்த படத்தை முடித்த கையோடு தல நடிகரின் அடுத்த படத்திலும் நடிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த படத்தின் நாயகி வாய்ப்பை பெரு முயற்சி செய்து பையா நாயகி பெற்றுவிட்டார்.

இதையடுத்து பிக்கப் டிராப் நடிகருடன் நயன நடிகை நடித்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் பையா நாயகியே ஒப்பந்தம் ஆகிவிட்டார். இப்படி அடுத்தடுத்து வாய்ப்புகளை அவர் பெற்று வருவதால் நயன நடிகை சற்று ஆடிப்போயுள்ளாராம்.

அதனால் இனியாவது பையா நாயகியிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நயன நடிகை முடிவு செய்து அதன்படி நடந்து வருகிறாராம். நயன நடிகைக்கு வாய்ப்புகளுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால் அவர் கேட்கும் சம்பளம் தான் சில இயக்குனர்களை யோசிக்க வைக்கிறதாம்.

 

Post a Comment