ஒற்றுமையாக இருக்கும் தமிழர்களிடையே மொழி சண்டையை இழுத்து விடாதீர்கள்: வடிவேல்

|

சென்னை: ஒற்றுமையாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களிடம் மொழிச் சண்டையை இழுத்து விடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் வடிவேல்.

நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு காமெடி நடிகர் வடிவேல் கதாநாயகனாக நடித்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், ‘தெனாலிராமன். யுவராஜ் தயாளன் டைரக்ட் செய்துள்ள இப்படத்தில் தெனாலிராமன் மற்றும் அரசனாக இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார் வடிவேல். படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி தீக்‌ஷித் நடித்துள்ளார்.

இதற்கிடையே ‘தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தியிருப்பதாக போராட்டம் நடத்தி வரும் தெலுங்கு அமைப்பை சேர்ந்த சிலர் படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சினையில், வடிவேலுவுக்கு ஆதரவாக ‘நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்தார். அவரை கண்டித்தும் தெலுங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.

இந்நிலையில், ‘தெனாலிராமன்' பட பிரச்சினை தொடர்பாக நடிகர் வடிவேல் தமிழ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

 

Post a Comment