சந்தானமும், தேவி தியேட்டரும்...

|

சென்னை: சந்தானம் தான் சோலோ ஹீரோவாக நடிக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தனக்கு ராசியான தேவி தியேட்டரில் வைத்துள்ளார்.

சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சோலோ ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் வேலைகள் மளமளவென நடக்கின்றது. ஸ்ரீநாத் இயக்கும் இப்படத்தில் அஷ்னா சாவேரி ஹீரோயினாக நடிக்கிறார்.

சந்தானமும், தேவி தியேட்டரும்...

படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (14ம் தேதி) அதாவது தமிழ்ப் புத்தாண்டு அன்று சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் நடைபெறுகிறது. இதே தேவி தியேட்டரில் தான் சந்தானம் தயாரித்து நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த படம் ஹிட்டானதை அடுத்து சென்டிமென்ட்டாக மீண்டும் தேவி தியேட்டரில் இசை வெளியீட்டு விழாவை வைத்துள்ளாராம்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஹிட் தெலுங்கு படமான மரியாத ராமண்ணாவின் ரீமேக் தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படத்தை பிரகாஷ் பொட்லூரியுடன் சேர்ந்து சந்தானம் தயாரித்துள்ளார்.

 

Post a Comment