கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

|

கேன்ஸ்: உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் திரையிடப்பட்டது.

இப்படத்தில் பணியாற்றிய சவுன்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி இந்த திரையிடலில் பங்கேற்றார்.

கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

கேன்ஸ் விழாவில் தான் பங்கேற்றதை, கோச்சடையான் பேனருடன் நின்று படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டே கேன்ஸ் விழாவில் கோச்சடையான் ட்ரலைவர் வெளியிடப்படும் என்றும், ரஜினி அதில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் ரஜினியால் பங்கேற்க முடியவில்லை. அதன் பிறகு பல மாதங்கள் கழித்தே கோச்சடையான் ட்ரைலர் வெளியானது.

இந்த ஆண்டு கேன்ஸ் தொடங்கும்போது, படமே வெளியீட்டுக்கு தயாராகிவிட்டதால், இப்படத்தை கேன்ஸ் விழாவின் போட்டியற்ற பிரிவில் திரையிட முடிவு செய்து அனுப்பி வைத்தனர்.

கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

கோச்சடையான் திரையிடலின்போது, படத்தில் பணியாற்றிய ஆஸ்கர் விருது வென்ற சவுன்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி கலந்து கொண்டார்.

கோச்சடையான் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

வரும் மே 23-ம் தேதி கோச்சடையான் உலகெங்கும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment