விஜய் அப்படியே தான் இருக்கிறார்: ஆனால் அவர் லுக்கும், மாஸும்...- மதி

|

சென்னை: இத்தனை ஆண்டுகளில் விஜய் அப்படியே தான் உள்ளார். ஆனால் அவரது லுக்கும், மாஸும் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது என்று ஒளிப்பதிவாளரான மதி தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் மதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 20 படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு அவர் பணிபுரிந்த மிர்ச்சி, பாண்டியநாடு மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய படங்கள் ஹிட்டாகின.

விஜய் அப்படியே தான் இருக்கிறார்: ஆனால் அவர் லுக்கும், மாஸும்...- மதி

முன்னதாக கேமராமேன் சரவணனிடம் அவர் வேலை பார்த்தார். அப்போது அவர் விஜய்யின் பூவே உனக்காக உள்ளிட்ட சில படங்களில் சரவணனுக்கு உதவியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் விஜய் பற்றி கூறுகையில்,

நேரம் தவறாதவர் விஜய். அவர் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவது பற்றி நான் அசிஸ்டெண்டாக இருக்கையிலேயே கேள்விப்பட்டுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலாயுதம் படத்திற்காக டெஸ் ஷூட்டில் இருந்தேன். இத்தனை ஆண்டுகளில் விஜய் சற்றும் மாறாமல் அப்படியே தான் இருந்தார். அவருக்கு தலைக்கணம், பெரிய ஸ்டார் என்ற நினைப்பே இல்லை. அவர் கூலாக இருந்தார். ஆனால் அவரது லுக், மாஸ் ஆகியவை அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டன என்றார்.

 

Post a Comment