ஜெயம் ரவி மற்றும் ஷாம் இருவருக்கும் தன் படங்களில் வாய்ப்பளிக்கப் போவதாக பொது மேடையிலேயே அறிவித்துவிட்டார் இயக்குநர் பாலா.
நேற்று நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஜெயம் ராஜா, எப்படியாவது தன் தம்பி ஜெயம் ரவிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என இயக்குநர் பாலாவிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த விழாவுக்கு நடிகர் ஷாமும் வந்திருந்தார். பாலா படத்தில் நடிக்கும் கனவு தனக்கும் இருப்பதாகக் கூறினார் ஷாம்.
இதைக் கேட்ட பாலா, கண்டிப்பாக இருவரும் என் படத்தில் நடிப்பார்கள் என உறுதியளித்தார்.
அத்துடன் ஷாம் நடிப்பில் வெளியான ஆறு மெழுகுவர்த்திகள் படத்தில் பெரும் சிரமம் எடுத்து நடித்த ஷாமை நான் பாராட்டுகிறேன் என்றும், அவர் பட்ட சிரமத்துக்காகவே அடுத்த படத்தில் ஷாமுக்கு வாய்ப்புத் தருகிறேன் என்றும் கூறினார்.
ஜெயம் ரவிக்கும் நிச்சயம் வாய்ப்பு தருவதாகக் கூறிய பாலா, அவரது கால்ஷீட் விஷயங்களை அவர் அப்பாவிடம் பேசுகிறேன், என்றும் தெரிவித்தார்.
ஆக ஜெயம் ரவியும் ஷாமும்தான் பாலாவின் அடுத்த பட ஹீரோக்கள்...
Post a Comment