குடும்ப விழான்னா தான் வருவீங்களோ... நம்பர் நடிகைகள் மீது கடுப்பில் தயாரிப்பாளர்கள் !

|

சென்னை: முன்பெல்லாம் தான் நடிக்கிற படங்கள் சம்பந்தப்பட்ட விழாவுக்கு கட்டாயம் ஆஜராகி விடுவார் நம்பர் நடிகை. ஆனால், சமீபகாலமாக மற்றொரு நம்பர் விழாக்களை புறக்கணிப்பதைக் கேள்விப்பட்டு தானும் அதே பாணியை பின்பற்றத் தொடங்கினார்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்கப் ட்ராப் நடிகர் நடத்திய ஆடியோ ரிலீசில் இரண்டு நம்பர் நடிகைகளும் கலந்து கொண்டனர். இவர்கள் இரண்டு பேருக்குமே எந்த விதத்தில் சம்பந்தம் இல்லாத அந்த படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டதோடு, அது எங்கள் குடும்ப விழா என்றும் மார்தட்டிக்கொண்டனர். இது தயாரிப்பாளர்களை கடுப்பாக்கியுள்ளது.

இந்தநிலையில், பூமி பெயரில் நம்பர் நடிகை நடித்துள்ள படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நாயகி மட்டும் மிஸ்ஸிங். இது தொடர்பாக நாயகனிடம் கேட்டதற்கு, ‘அவர் அமெரிக்காவில் உள்ளார். அதனால் தான் கலந்து கொள்ளவில்லை' என சமாளித்தார்.

ஆனபோது, நம்பர் நடிகையின் இந்த அலட்சியப் போக்கு கோடம்பாக்கத்தில் அவருக்கான எதிர்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.

 

Post a Comment