சென்னை: த்ரிஷ்யம் படத்தின் தமிழ் பதிப்பில் நடிகை ஸ்ரீதேவி நடிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம் அளித்துள்ளார்.
மலையாளத்தில் மோகன் லால் - மீனா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தை, கமல் ஹாஸனை வைத்து தமிழில் எடுக்கிறார் ஜீத்து ஜோசப்.
இந்தப் படத்தில் கமல் ஹாஸன், கவுதமி, அபிராமி போன்றவர்கள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முக்கியமான வேடத்தில் ஸ்ரீதேவி நடிப்பார் என செய்திகள் பெரிய அளவில் வெளியாகின.
கமலும் ஸ்ரீதேவியும் பல ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து நடிக்கிறார்கள் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது.
ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர். அவர் கூறுகையில், "என் படத்தில் கமலுடன் ஸ்ரீதேவி இணைவதாக பல பத்திரிகைகளில் செய்திகளைப் பார்த்தேன்.
இந்த செய்திகள் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் என் படத்தில் ஸ்ரீதேவி இல்லை என்பது மட்டுமே உண்மை," என்றார்.
Post a Comment