அவர்டுன்னா எனக்கு அலர்ஜி… விஜய் டிவி விருது விழாவை நக்கலடித்த பவர்ஸ்டார்

|

அவர்டுன்னா எனக்கு அலர்ஜி… விஜய் டிவி விருது விழாவை நக்கலடித்த பவர்ஸ்டார்
சென்னை: எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை கிடையாது. ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ அதுவே போதும் என்று பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.

2013ம் ஆண்டிற்கான விஜய் டிவி விருது வழங்கும் விழா சனிக்கிழமை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழ் சினிமா உலகின் பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் இந்த விழாவில் குவிந்தனர்.

பவரை கூப்பிடலையே

ஆனால் இந்த விழாவிற்கு பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லையாம்.

அவர்டுன்னா அலர்ஜி

இதனால் கடுப்பான சீனிவாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தனக்கு விருதுகள் மீது நம்பிக்கையில்லை என்று கருத்திட்டுள்ளார்.

உங்களுக்கு ஆஸ்கார்தான்

இந்த கருத்தைப் படித்த அவரது ரசிகர்கள், தலைவா, நீங்க எல்லாம் ஆஸ்காருக்குத்தான் தகுதியானவர் என்று பதிலுக்கு கருத்து கூறியுள்ளனர்.

சர்ச்சை நாயகன்

எந்த வாய்ப்பும் இல்லாவிட்டாலும் எதையாவது சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது பவரின் வாடிக்கை. சமீபத்தில் அமலாபால் திருமணம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கலாம்.

 

Post a Comment