சென்னை: அதிரடியாக சம்பளம் கேட்டு பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்வேன் என்று அதிகாரம் செய்த செவத்த பொண்ணு நடிகை தற்போது அடங்கிவிட்டாராம்.
செவ செவன்னு சிகப்பாக இருக்கும் அந்த நடிகை தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். திடீர் என்று பாலிவுட்டில் நுழைந்தார். அவர் நேரமோ என்னமோ அவர் நடித்த படங்கள் இரண்டும் ஊத்திக் கொண்டன. அண்மயில் வெளியான அவரது இந்தி படம் வசூலை அள்ளினாலும் விமர்சகர்கள் இது எல்லாம் ஒரு படமா என்று துப்பினர்.
மேலும் நடிகையின் நடிப்பை யாருமே கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். முன்பு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தால் தான் நடிப்பேன், தல, தளபதி, சிங்கத்துடன் தான் நடிப்பேன் என்று ஆயிரம் கன்டிஷன்கள் போட்ட நடிகை தற்போது ஆளே மாறிப் போய்விட்டாராம்.
நீங்கள் கொடுப்பதை கொடுங்க சாமி என்று கூறி சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளாராம். மேலும் அவருடன் தான் நடிப்பேன், இவருடன் தான் நடிப்பேன் என்றும் கூறுவது இல்லையாம். குரலில் பழைய அதிகாரம் இல்லையாம்.
ஸ்டெடியாக சென்ற நடிகையின் மார்க்கெட்டை பாலிவுட் ஆசை இப்படி பதம் பார்த்துவிட்டதே.
Post a Comment