சென்னை: தனது பிறந்தநாளில் பேரன் பெயர் கொண்ட படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று இருக்கிறாராம் ஸ்டைல் நடிகர்.
ஸ்டைல் நடிகர் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படத்திற்கு அவரது பேரன் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு மைசூரில் துவங்கி ஆந்திராவில் நடந்து வருகிறது.
படக்குழு சென்னை திரும்பிய பிறகு இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து பார்த்த பிறேக அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம் ஸ்டைல் நடிகர். மேலும் படத்தை தனது பிறந்தநாள் அன்று தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துள்ளாராம் நடிகர்.
இதற்கிடையே படப்பிடிப்பில் நடிகர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்திகள் எல்லாம் பொய் என்று இயக்குனர் தெரிவித்தார்.
இந்த படத்தில் ஸ்டைல் நடிகருக்கு உயர்ந்த நடிகை மற்றும் நடிகரின் குருநாதரின் மகள் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment