விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் தருவதற்காக மதுரையில் ஒரு பத்திரிகை ஏற்பாடு செய்துள்ள விழாவுக்கு தமிழக அரசு இன்னும் அனுமதி தரவில்லை.
மேலும் இந்த விழாவை தவிர்க்குமாறு சற்று கண்டிப்போடு கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விஷயம் தெரிந்து ஆடிப் போயுள்ளார்களாம் விஜய்யும் அவருக்கு விழா எடுக்கும் குழுவினரும்.
இந்த விழாவுக்கு தடை விதிக்க தமிழக அரசு தெரிவித்துள்ள காரணமும் தவிர்க்க முடியாதது என்றே தெரிய வந்துள்ளது.
ஆகஸ்ட் 15-ம் தேதி மாநிலமெங்கும் நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடும் நேரத்தில், வெறும் விளம்பரத்துக்காக எடுக்கப்படும் இந்த விழாவால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் இந்த விழாவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
இன்னொரு பக்கம் விஜய் நடித்த கத்தி படத்தை வெளியாக விடாமல் தடுக்கும் முயற்சியில் மாணவர் அமைப்பு மற்றும் தமிழுணர்வாளர்கள் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
+ comments + 1 comments
DICTATORSHIP
Post a Comment