சென்னை: த்ரிஷா, அனுஷ்கா என்று 2 நாயகிகள் இருந்தும் தல 55 படத்தில் ஒரு டூயட் கூட இல்லை என்று கூறப்படுகிறது.
அஜீத் த்ரிஷா, அனுஷ்கா நடித்து வரும் படம் தல 55. இந்த படத்தில் அஜீத்தின் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
படத்தில் அஜீத்தை அறிமுகப்படுத்தும் பாடலை மாஸாக இருக்கும்படி படமாக்க விரும்புகிறார்களாம். அப்படி ஒரு மாஸ் பாடலுக்கு ஏற்ற ட்யூனை ஹாரிஸ் ஜெயராஜ் தயார் செய்கிறாராம்.
மாஸ் பாடல் சரி த்ரிஷா, அனுஷ்கா என்று இரண்டு நாயகிகள் இருக்கிறார்களே அவர்களுடன் அஜீத்துக்கு எத்தனை டூயட் பாடலோ என்று நினைக்கலாம். ஆனால் படத்தில் ஒரு டூயட் பாடல் கூட இல்லை என்று கூறப்படுகிறது.
மாஸ் பாடல் எல்லாம் இருக்கட்டும் படத்திற்கு முதலில் ஒரு தலைப்பை வைங்க பாஸ் என்று கூறுகிறார்கள் அஜீத் ரசிகர்கள்.
Post a Comment