ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி சிறப்புத் திரைப்படங்களாக சன்டிவி, ஜெயாடிவிகளில் காலை 11 மணிக்கு நடிகை சமந்தா நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.
காலை நேரத்தில் சமந்தா ரசிகர்களுக்காக சன் டிவியில் நானி, சமந்தா நடித்த நான் ஈ திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது.
தெலுங்கில் ஈகா என வந்து வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தமிழில் நான் ஈ யாக வந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்தது. நடிகை சமந்தாவிற்கு தமிழில் தனி ரசிகர்களை ஏற்படுத்தி கொடுத்தது.
இதற்குப் பின்னர், கவுதம் மேனர் படமான நீதானே என் பொன் வசந்தம், லிங்குசாமியின் அஞ்சான், ஏ.ஆர் முருகதாசின் கத்தி படங்களில் புக் ஆனார்.
அதேபோல ஜெயா டிவியில் ஆயுதபூஜை சிறப்புத் திரைப்படமாக இன்று காலை 11 மணிமுதல் ஜீவா, சமந்தா நடித்த நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது. அப்புறம் என்ன ரிமோட்டை கையில் எடுத்துக்கொண்டு மாத்தி மாத்தி சமந்தா நடித்த படங்களை பாருங்கள் ரசிகர்களே.
Post a Comment