ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐ படத்தின் ட்ரைலர் பார்த்து வியந்து போய் பாராட்டு தெரிவித்துள்ளார் ஷாரூக்கான்.
ஷாரூக்கான் - தீபிகா படுகோன் நடித்துள்ள புதிய படம் ‘ஹேப்பி நியூ இயர்.' தற்போது இப்படத்தின் விளம்பரத்துக்காக நாடு முழுவதும் சுற்றி வருகிறார்கள் இருவரும்.
சமீபத்தில் சென்னைக்கும் இருவரும் வந்திருந்தனர். மிகத் தாமதமாக வந்ததால், பெரும்பாலான செய்தியாளர்கள் புறக்கணித்தாலும், சிலர் மட்டும் ஷாரூக்கானுடன் பேசினர்.
அப்போது ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ள ஐ படத்தின் டிரைலரை பார்த்து தான் வியந்ததாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஐ' பட ட்ரைலரைப் பார்க்கும்போது வித்தியாசமான பாணியில் மிகப் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளது தெரிந்தது.
இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத அளவில் இருக்கிறது. இப்படத்தின் டிரைலரைப் பார்த்து அசந்து போனேன்,' என்றார்.
ஷங்கரும் ஷாரூக்கானும் இணைந்து ரோபோ படத்தில் பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அந்தப் படத்தில் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment