மணிரத்னத்தின் புதுப்பட தலைப்பு ஓகே கண்மணி?

|

சென்னை: துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்திற்கு ஓகே கண்மணி என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடல் படத்தை அடுத்து மணிரத்னம் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். காதல் கதை என்று கூறப்படும் இந்த படத்திற்கு ஓகே கண்மணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தலைப்பு குறித்து மணிரத்னம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

மணியின் புதுப்பட தலைப்பு 'ஓகே கண்மணி'?

நித்யா, துல்கர் ஜோடி சேர்ந்துள்ளது இது மூன்றாவது முறை ஆகும். இந்த படத்தில் பை ஸ்டார் நாயகி கனிகாவும் நடிக்கிறார். இந்த படம் தமிழ் தவிர மலையாளத்திலும் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.

படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதத்தில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Post a Comment