‘உதிரிப்பூக்கள்’ பட ஒளிப்பதிவாளர் அசோக்குமார் காலமானார்

|

சென்னை: உதிரிப்பூக்கள், ஜானி உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்குமார் நேற்று காலமானார். அவருக்கு வயது 70.

கடந்த ஜூன் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பாட்டார் ஒளிப்பதிவாளர் அசோக்குமார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது பிரபல இயக்குநர்கள் மகேந்திரன், பாண்டியராஜன் ஆகியோர் நேரில் சென்று உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

‘உதிரிப்பூக்கள்’ பட ஒளிப்பதிவாளர் அசோக்குமார் காலமானார்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போதும், தொடர்ந்து அவருக்கு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அசோக்குமார் காலமானார்.

மரணமடைந்த அசோக்குமார் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்பட நூறுக்கும் அதிகமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்துள்ளார்.

 

Post a Comment