பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தைக் கைவிட்டார் ராஜேஷ்

|

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவிலிருந்து பின்வாங்கினார் இயக்குநர் ராஜேஷ்.

ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்யா - தமன்னாவை வைத்து இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தைக் கைவிட்டார் ராஜேஷ்

இப்போது இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவை கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளார். அதற்கு பதில் புதிய கதையை இயக்கப் போகிறாராம்.

இரண்டாம் பாகத்துக்கு அறிவிக்கப்பட்ட அதே ஹீரோ ஹீரோயினை வைத்தே புதிய படத்தை இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா தன் சொந்தப் பட நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

 

Post a Comment