சென்னை: கத்தி படத்தின் வெற்றிவிழா நாளை கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறுகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த படம் கத்தி. பல பிரச்சனைகளுக்கு பிறகு படம் தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸானது. படம் தமிழகம் தவிர கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இது தவிர விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ள இங்கிலாந்தில் 70 தியேட்டர்களில் கத்தி படம் ரிலீஸானது.
படம் ரிலீஸான முதல்நாளே ரூ.23.8 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது என முருகதாஸ் ட்விட்டரில் தெரிவித்தார். இந்நிலையில் கத்தி படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நாளை நடைபெறுகிறது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் விஜய் மற்றும் முருகதாஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். கத்தி படத்தை அடுத்து சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இந்தி படம் ஒன்றை எடுக்கிறார் முருகதாஸ். விஜய் சிம்புதேவன் படத்தில் நடிக்கிறார்.
கத்தி படம் ஆஸ்திரேலியா, மலேசியாவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment