சென்னை: விஜய் ரசிகர்கள் அவருக்கு சிலை செய்துள்ளனர். அந்த சிலை இன்று குரோம்பேட்டையில் திறந்து வைக்கப்படுகிறது.
இளையதளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. கத்தி படம் நல்ல வசூல் செய்து வரும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் தளபதியை சிலையாக வடித்துள்ளனர்.
ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை, கண்ணாடி அணிந்தபடி இருக்கிறது விஜய்யின் சிலை. இந்த சிலை திறப்பு விழா இன்று சென்னை, குரோம்பேட்டையில் நடக்க உள்ளது. மக்கள் பார்க்கும் வகையில் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டர் வளாகத்தில் சிலையை நிறுவ ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த சிலை திறப்பு விழா பற்றி தான் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
Post a Comment