ட்விட்டர் ட்ரெண்டில் இன்று முதலிடத்தைப் பிடித்துள்ளது அஜீத்தின் என்னை அறிந்தால் தலைப்பு.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத், த்ரிஷா, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் இதுவரை தல 55 என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட 8 மாதங்கள் எடுத்துக் கொண்டனர். அதனாலேயே படத்தின் தலைப்பு குறித்து ஒரு எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்தப் படத்தின் தலைப்பை அறிவித்தனர் படக் குழுவினர்.
என்னை அறிந்தால் என்று படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர். இந்தத் தலைப்பு வெளியானதிலிருந்து, சமூக வலைத் தலங்களில் அந்தத் தலைப்பு குறித்து பலரும் எழுதி வருகின்றனர்.
ட்விட்டரில் இதுவரை 50 ஆயிரம் ட்வீட்டுகளுக்கு மேல் என்னை அறிந்தால் பற்றி வந்துவிட்டன. இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டில் என்னை அறிந்தால் என்ற தலைப்புதான் இன்று முதலிடத்தில் உள்ளது.
Post a Comment