அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளையின் இரண்டு நாள் மாநாடு - விவேக், நா முத்துக்குமார் பங்கேற்பு

|

சிகாகோ(யு.எஸ்): தமிழ் நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை 40 ஆண்டுகளாக செயல்படுத்தி வரும் அமெரிக்காவிலுள்ள தமிழ்நாடு அறக்கட்டளையின் இரண்டு நாள் மாநாடு சிகாகோவில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் நடிகர் விவேக், பாடலாசிரியர் முத்துக்குமார் உள்பட திரைத்துறையினர், இலக்கியவாதிகள் பங்கேற்கினர்.

அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளையின் இரண்டு நாள் மாநாடு - விவேக், நா முத்துக்குமார் பங்கேற்பு

தமிழ்நாட்டு டாக்டர்கள் ஆரம்பித்த தமிழர் அமைப்பு

1974 ஆம் ஆண்டு நவம்பர் 29 ம் தேதி, டாக்டர் R,பழநிசாமி, டாக்டர் P.G.பெருமாள்சாமி, டாக்டர் B.தியாகராஜன், டாக்டர் பிஜி பெரியசாமி ஆகியோர் தமிழகத்தின் மக்கள் நலனுக்காக நலத்திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அறக்கட்டளையை ஆரம்பித்தனர். அன்று முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்க அளவில் மாநாடு நடத்திவருகின்றனர். அதன் மூலம் திரட்டப்படும் நிதி மூலம் தமிழகத்தில் கிராமப்புறத்தில் கல்வி மேம்பாட்டிற்கான் திட்டங்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளையின் இரண்டு நாள் மாநாடு - விவேக், நா முத்துக்குமார் பங்கேற்பு

சிகாகோ மாநாடும் சிதம்பரம் பள்ளிகளும்

40 ஆம் ஆண்டிற்கான மாநாடு, சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில், சிகாகோவில் மே 24, 25ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அறக்கட்டளையின் உயர்நிலைக் குழு மாநாட்டிற்கான வரைவு திட்டத்தை விவாதித்து வெளியிட்டுள்ளனர். இந்த மா நாட்டில் திரட்டப்படும் நிதியைக் கொண்டு சிதம்பரம் பகுதியிலுள்ள கிராம்ப்புற பள்ளிகளின் மேம்பாட்டுக்காக திட்டங்கள் தீட்டப்படவுள்ளன. ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற முழக்கத்துடன் செயல்படும் தமிழ்நாடு அறக்கட்டளை, பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை எப்படி அதிகரிப்பது என்ற செயல் திட்டத்தையும், சிதம்பரம் கிராமப்புறங்களில் செயல்படுத்த உள்ளது.

அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளையின் இரண்டு நாள் மாநாடு - விவேக், நா முத்துக்குமார் பங்கேற்பு

நா முத்துக்குமார்

மாநாட்டிற்கு வருகைதரும் தமிழறிஞர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களின் முதல் பட்டியல் வெளியாகியுள்ளது. கவிஞர் நா.முத்துக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன், மகுடேசுவரன், மேகலா ராமமூர்த்தி மற்றும் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆகியோர் வர இருக்கிறார்கள். சின்னத்திரை/திரைப்பட கலைஞர்கள் தீபக், அர்ச்சனா மற்றும் மதுரை முத்து ஆகியோரது பெயர்களும் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பாடகர் கார்த்திக்

பிண்ணனி பாடகர் கார்த்திக் தனது குழுவினரோடு கலந்து கொண்டு இன்னிசைக் கச்சேரி வழங்க உள்ளார். மேலும் சில முக்கிய நட்சத்திரங்கள் வர இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக் - செல் முருகன்

முன்னணி நகைச்சுவைக் கலைஞர்கள் விவேக், செல்முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.

அறக்கட்டளையின் தலைவர் அறவாழி, துணைத் தலைவர்கள் சோமலை சோமசுந்தரம், டாக்டர் பத்மினி, முன்னாள் தலைவர் துக்காராம் ஆகியோரின் வழிகாட்டுதல்களுடன் சிகாகோ தமிழ்ச் சங்க தலைவர் சோமு, முன்னாள் தமிழ்ச் சங்க தலைவர் வீரா வேணுகோபால் மற்றும் பல தன்னார்வத் தொண்டர்கள் மாநாட்டிற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Post a Comment