ரிங்டோன் போட்டுக் கொடுத்ததற்கான சம்பளத்திற்கு வரி கட்டாமல் ஏமாற்றினாரா ஏ.ஆர். ரஹ்மான்?

|

சென்னை: 2010-2011ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த செல்போன் நிறுவனமான லெபாராவுக்கு ரிங்டோன் போட்டுக் கொடுத்ததற்காக வாங்கிய சம்பளத்திற்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆஸ்கர் மன்னன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 2010-2011ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த செல்போன் நிறுவனமான லெபாராவுக்கு ரிங்டோன் போட்டுக் கொடுத்துள்ளார். அதற்காக லெபாரா ரஹ்மானுக்கு ரூ.3.47 கோடி சம்பளமாக அளித்துள்ளது. இந்த பணத்தை ஏ.ஆர்.ரஹ்மான் பவுன்டேஷன் என்ற டிரஸ்ட்டின் வங்கி கணக்கில் செலுத்தும்படி ரஹ்மான் அந்நிறுவனத்தை கேட்டதாக கூறப்படுகிறது.

ரிங்டோன் போட்டுக் கொடுத்ததற்கான சம்பளத்திற்கு வரி கட்டாமல் ஏமாற்றினாரா ஏ.ஆர். ரஹ்மான்?

அந்த டிரஸ்ட்டுக்கு வெளிநாட்டு பணத்தை பெற அனுமதி இல்லை. மேலும் டிரஸ்ட்டின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது நன்கொடையும் அல்ல என்பதால் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ரஹ்மான் மீறியுள்ளதாகவும், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஹ்மானின் ஆடிட்டர் வி. சடகோபன் கூறுகையில்,

நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது இந்த விவகாரத்தை தற்போது ஏன் பிரச்சனையாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இது தொடர்பாக ரஹ்மான் விரைவில் அறிக்கை வெளியிடுவார். ஏற்கனவே நாங்கள் அதில் 50 சதவீத வரியை செலுத்திவிட்டோம். அவர்கள் செலுத்திய மொத்த பணமும் பிக்சட் டெபாசிட்டில் உள்ளது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே ரஹ்மான் அலுவலகத்திற்கு வந்து ஆவணங்களை சரிபார்த்தனர் என்றார்.

 

Post a Comment