1009 வாரங்களாக ஓடிய ஷாரூக்கானின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே இன்று நிறுத்தப்பட்டது!

|

இந்தி நடிகர் ஷாருக்கான்- கஜோல் நடித்து வெளியான 'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே' படம் 1009 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது.

இப்படம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

ஆதித்ய சோப்ரா இயக்கத்தில் நடிகர் ஷாருகான் -கஜோல் நடிப்பில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த படம் தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே.

1009 வாரங்களாக ஓடிய ஷாரூக்கானின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே இன்று நிறுத்தப்பட்டது!

இனிமையான காதல் கதை, அருமையான பாடல்கள் என்பதால் ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து குவிந்தது.

மும்பையில் உள்ள 'மராத்தா மந்திர்' தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் இன்றுடன் 1009 வாரங்கள் (அதாவது சுமார் 20 ஆண்டுகள்) தொடர்ந்து ஓடியுள்ளது.

இந்த படம் இன்றுடன் மராத்தா மந்திர் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 1000 வாரம் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

உலக சினிமாவில் இது புதிய சாதனையாகும்.

வழக்கமாக வெளியாகும் புதிய படங்கள் 3 காட்சிகள் ஓட வேண்டி இருப்பதால் தியேட்டர் நிர்வாகமும், யாஷ் சோப்ரா பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தை நிறுத்திக் கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.

இன்று காலை 9.15 காட்சியுடன் இந்த படத்தின் சாதனை முடிவுக்கு வந்தது. கடைசி நாளான இன்று இந்த படத்தை 210 பேர் பார்த்துள்ளனர்.

 

Post a Comment