இனி கொஞ்ச காலம் சமந்தா ட்வீட் செய்ய மாட்டார்!

|

சென்னை: நடிகை சமந்தா ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.

நடிகை சமந்தா தற்போது தெலுங்கை விட தமிழ் படங்களில் தான் பிசியாக உள்ளார். கை நிறைய படங்கள் வைத்துள்ளார். ஆனால் அண்மையில் தான் அவருக்கும் சித்தார்த்துக்கும் இடையேயான காதல் முறிந்தது. இந்நிலையில் சமந்தா ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.

ட்விட்டரில் இருந்து சமந்தா திடீர் விலகல்: என்னாச்சு?

இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

ட்விட்டரில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க உள்ளேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மனதில் படுவதையும், தான் செய்யும் செயல்கள் பற்றியும் அவ்வப்போது ட்வீட் செய்யும் பழக்கம் உள்ளவர் சமந்தா. நல்ல விஷயங்களை ஆதரித்தும், கண்டிக்கத்தக்கதை கடுமையாக விமர்சித்தும் ட்வீட் செய்து வந்தார். காதல் முறிந்தபோது கூட சித்தார்த்தை பற்றி நல்லவிதமாகவே ட்வீட் செய்தார்.

இந்நிலையில் அவர் தற்போது ட்விட்டரில் இருந்து விலகியுள்ளது அவரின் உடல் நிலை எதுவும் பாதிக்கப்பட்டுள்ளதோ என்று ரசிகர்களை குழம்ப வைத்துள்ளது.

 

Post a Comment