எல்லாம் என் கெரகம்... நடிகையாகிட்டேன்! - புலம்பும் டாப்ஸி

|

கரகாட்டக்காரன் கோவை சரளா ரேஞ்சுக்குப் புலம்ப ஆரம்பித்துவிட்டார் நடிகை டாப்ஸி.

தமிழில் ஆடுகளம் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி, தொடர்ந்து சில படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்தது ஆரம்பம். ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

எல்லாம் என் கெரகம்... நடிகையாகிட்டேன்! - புலம்பும் டாப்ஸி

தற்போது லாரன்சுடன் முனி 3-ல் நடிக்கிறார்.

பெரிய ரேஞ்சுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட டாப்சிக்கு இப்போது போதிய படங்கள் இல்லை. வரும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இல்லை.

எனவே வெறுத்துப் போய், ஏன்டா இந்த சினிமாவுக்கு வந்தோம் என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறுகையில், "திறமையும் அழகும் இருந்தும்கூட எனக்கு போதிய படங்கள் இல்லாதது வேதனையாக உள்ளது.

படித்துவிட்டு ஏதேனும் வியாபாரத்தில் இறங்கி தொழிலதிபராகியிருக்கலாம். என் தலையெழுத்து சினிமா நடிகையாகி வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

சினிமாவைத் தேர்வு செய்தது தவறுதான்... இதற்காக மிகவும் வருந்துகிறேன்," என்றார்.

 

Post a Comment