ஒரு சினிமா 2 மணி நேரம் இருந்தாலே போதும் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்ட இந்த நேரத்தில், 3 மணி நேரத்துக்கு குறையாமல் எடுத்து ரிலீஸ் பண்ணி வருகிறார்கள்.
சமீபத்தில் வந்த பெரிய படங்கள் அனைத்துமே 3 மணி நேரம் அல்லது அதற்கு மேலும் நீளம் கொண்டவையாகவே உள்ளன.
அடுத்து வரவிருக்கும் அஜீத்தின் என்னை அறிந்தால் கூட கிட்டத்தட்ட 3 மணி நேரம்தான்.
ஒரு காட்சியைக் கூட குறைக்கவோ வெட்டவோ மனசில்லை என்று கூறி ரிலீஸ் செய்வதும், பின்னர் மக்கள் பொறுமையிழந்து நெளிவதைப் பார்த்து சில நிமிட காட்சிகளைக் குறைப்பதும் தொடர்கிறது.
சமீபத்தில் வெளியான இசை படத்திலும் இதே கதைதான். இந்தப் படம் 3 மணி நேரம் 10 நிமிடம் ஓடக் கூடிய வகையில் வெளியானது.
படம் பார்த்த பலரும் படத்தின் நீளத்தை குறையாகச் சொன்னதை அறிந்து, உடனடியாக 7 நிமிடக் காட்சிகளைக் குறைத்துள்ளார் எஸ் ஜே சூர்யா.
Post a Comment