செக் மோசடி: இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு

|

சென்னை: சினிமா பைனான்சியர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா. இவரிடமிருந்து, இயக்குநரும் நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா கடந்த 2012-ம் ஆண்டில் ரூ. 65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக கஸ்தூரி ராஜா இரண்டு காசோலைகளை போத்திராவிடம் கொடுத்துள்ளார்.

செக் மோசடி: இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு

இந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கஸ்தூரி ராஜா வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து, அவர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மாஜிஸ்திரேட் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி கோதண்டராஜ் விசாரணைக்கு வந்தது. அப்போது, கஸ்தூரி ராஜா தரப்பில் யாரும் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்டை பிறப்பித்து மாஜிஸ்திரேட் கோதண்டராஜ் உத்தரவிட்டார்.

வழக்கு மீண்டும் வரும் 13-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment