சென்னை: பேய் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அத்தகைய படங்களில் நடிக்க தயார் என்றும் நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
த்ரிஷா நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர் இதுவரை ஒரு பேய் படத்தில் கூட நடித்தது இல்லை. இந்நிலையில் அவருக்கு பேய் படங்கள் பிடிக்காது என்றும், அவர் பேய் படங்களில் நடிக்க மாட்டார் என்றும் அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
தன்னை தேடி வந்த பேய் பட வாய்ப்புகளை ஏற்க த்ரிஷா மறுத்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து த்ரிஷா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
பேய் படங்கள் பற்றி த்ரிஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கூறப்பட்டதற்கு மாறாக எனக்கு எப்பொழுதுமே பிடித்தது பேய் படங்கள் தான். அதனால் அத்தகைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment