கூட்டத்தில் சிக்கிய நடிகர்: யாரோ பிடித்து இழுத்ததில் இரண்டாக கிழிந்த காது மடல்

|

கான்பூர்: கான்பூரில் பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் கடுக்கனை யாரோ பிடித்து இழுக்கையில் அவரது காது மடல் இரண்டாக பிய்ந்துவிட்டது.

ரசிகர் பிடித்து இழுத்ததில் இரண்டாக கிழிந்த நடிகரின் காது மடல்

பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூர் ஏக்தா கபூரின் க்யா கூல் ஹைன் ஹம் 3 என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். வழக்கம் போல் ஏக்தா கபூரின் இந்த படத்திலும் அவரது சகோதரர் துஷார் கபூர் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் கான்பூர் நகரில் நடைபெற்றது. படப்பிடிப்பு நடப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர்.

இதை பார்த்த சக்தி கபூர் ரசிகர்களை சந்திக்க சென்றார். கூட்டத்தில் நின்று கொண்டிருந்த யாரோ சக்தி கபூரின் காதில் இருந்த கடுக்கனை பிடுங்கி எடுத்துவிட்டார். இதில் நடிகரின் காது மடல் இரண்டாக கிழிந்துவிட்டது. கடுக்கனும் திருடு போனது.

இதையடுத்து படக்குழுவினர் சக்தி கபூரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிகிச்சைக்குப் பிறகு சக்தி கபூர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கூட்டத்தில் இருந்த யாரோ என் காதை பிடித்து இழுத்ததில் காது மடல் இரண்டாக கிழிந்துவிட்டது. எனக்கு ஆதரவாக இருந்த படக்குழுவினருக்கு நன்றி என்றார்.

 

Post a Comment