சென்னை: நடிகர் சூர்யா இன்று காலை ட்விட்டரில் சேர்ந்தார். அவர் ட்விட்டரில் இணைந்த 1 மணிநேரத்தில் 21.5 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், தனுஷ், சிம்பு என்று பலரும் ட்விட்டரில் உள்ளனர். அவர்கள் தங்களின் படங்கள் பற்றியும், பிற நிகழ்ச்சிகள் பற்றியும் அவ்வப்போது ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஏதாவது சுபயோக சுபதினத்தை தேர்வு செய்து ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடுகிறார்கள்.
சூர்யாவோ ட்விட்டர் பக்கமே வராமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் மகளிர் தினமான இன்று காலை 11.30 மணிக்கு ட்விட்டரில் இணைந்தார். முன்னதாக சூர்யா ட்விட்டரில் சேர உள்ளதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவரை வரவேற்று ட்வீட் போட்டு வருகிறார்கள்.
இதனால் #WelcomeSuriyaToTwitter என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருந்தது.
ட்விட்டரில் சேர்ந்த சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது,
லவ் யூ ஆல். மகளிர் தின வாழ்த்துக்கள். ரொம்ப நாளா வரணும் என்று நினைத்தேன் இன்று வந்தாச்சு. இன்று எதுக்கு என்று கேட்டால் நான் நினைத்ததை விட நீங்கள் அதிகமாக அன்புகாட்டுவதால் தான். என்னுடைய ட்விட்டர் ஐடி @Suriya_offl. நன்றி என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment