சமத்து, நம்பர் நடிகை இடையே சண்டையாமே!

|

சென்னை: சமத்து நடிகைக்கும், நம்பர் நடிகைக்கும் இடையே சண்டையாம்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நம்பர் நடிகை. கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை பல ஹீரோக்களும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறார்கள்.

இந்நிலையில் நம்பர் நடிகைக்கும் சமத்து நடிகைக்கும் இடையே சண்டை என்று கூறப்படுகிறது. இத்தனை காலமாக தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த சமத்து தற்போது தமிழ் திரை உலகில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

அம்மணி நம்பர் நடிகைக்கு வந்த சில பட வாய்ப்புகளை தட்டிப் பறித்துவிட்டாராம். இதனால் தான் நம்பர் நடிகைக்கும், சமத்து நடிகைக்கும் இடையே பிரச்சனையாம். சமத்து பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆவது போன்று இருந்தது. ஆனால் தற்போது அந்த படத்தில் நம்பர் அல்லது வாரிசு நடிகை நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது சமத்துவை விட நம்பர் நடிகையின் கையில் தான் அதிக படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment