குற்றம் கடிதல் படத்துக்கு சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் க்றிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்' திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்று வருகிறது.
இன்னமும் திரைக்கு வராசத இந்தப் படம், 62 ஆம் தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.
#NFA: 62nd National Film Awards Jury presenting its Report to Shri @arunjaitley pic.twitter.com/U2Deaq2E3N
— MIB India (@MIB_India) March 24, 2015 கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்' திரைடப்படதிற்கு இவ்விருதினை வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தேசிய விருது வெல்லும் பெருமையை பெற்றுள்ளது. ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம்.
இதுகுறித்து ஜே சதீஷ்குமார் கூறுகையில், "தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு தேசிய விருது கிடைத்திருக்கிறது மிகப் பெருமிதமான தருணம் இது. நல்ல படங்கள் அதற்கான அந்தஸ்தை பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந் நிறுவனத்தை ஆரம்பித்தோம். எல்லா இடங்களிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் ஆதரவும், விருதுகளும் என்னை மென்மேலும் நல்ல படங்களைத் தயாரிக்க ஊக்கப் படுத்துகிறது," என்றார்.
Post a Comment